Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்தை ரஜினிகாந்த் ரசிகர்களுடன் எந்த திரையரங்கில் பார்க்க போகிறார் தெரியுமா?

ரஜினியின் நடிப்பில் நாளை 2.0 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பாகிஸ்தானிலும் நாளையே ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை எப்படியெல்லாம் கொண்டாடுவது என்று ரஜினி ரசிகர்கள் பயங்கரமான திட்டங்களை எல்லாம் வைத்துள்ளனர். ஆனால் இந்த 2.0 படத்தை ரஜினி தனது முதல் படம் போல் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் இயக்குனர் ஷங்கருடன் பார்க்க உள்ளாராம்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் தனது படத்தை பார்க்கவுள்ள ரஜினி எப்படி தியேட்டருக்கு செல்வார் என்பது ரகசியமாகவே உள்ளது. மாறுவேடத்தில் செல்லவும் வாய்ப்பு உள்ளதாம்.