Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என அஜித் நினைப்பார்- சிவா தகவல், ரசிகர்களே செய்வீர்களா?

விஸ்வாசம் என்ற படம் மூலம் நான்காவது முறையாக அஜித்-சிவா கூட்டணி அமைத்துள்ளார்கள். இந்த படம் கிராமத்து பின்னணியில் இருப்பதால் வீரம் படம் போல் தாறுமாறாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

படம் வரும் பொங்கலுக்கு படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில் இயக்குனர் சிவா படம் குறித்தும் அஜித் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது ரசிகர்கள் பற்றி அஜித் என்ன சொல்வார் என்று கேட்டதற்கு சிவா, ஒவ்வொரு ரசிகரும் தன்னோட சொந்த வாழ்க்கையில் தன்னோட கனவுகள் கைகூடி சந்தோஷமாக இருக்கணும், அவர்கள் குடும்பங்கள் சந்தோஷமா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

படம் எடுக்கிறோம் அவர்களுக்கு பிடித்தால் பார்த்து சந்தோஷப்படட்டும், அவர்களின் நேரத்தை குடும்பத்திற்கு செலவு செய்தால் போதும் என்று சொல்வார் என்றார்.