Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பருத்திவீரன் பட புகழ் நடிகர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- உண்மை நிலவரம்

பருத்திவீரன் உள்பட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் சரவணன். இவர் குறித்து ஒரு தவறான தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது இவர் பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வந்தது.

தன்னை பற்றி பரவும் பொய்யான வதந்திகளை பற்றி கேள்விப்பட்ட சரவணன், தனக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் தற்போது பூரண குணமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றேன் பின் சாதாரண காய்ச்சல் தான் என வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

அதன்பிறகு ஒரு படத்தில் கூட நடித்துவிட்டேன், ஆனால் சிலர் எனக்கு பன்றிக் காய்ச்சல் என போன் செய்து கேட்கின்றனர். எனக்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.