Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் நடந்த கொடுமை! நடந்தது என்ன - கைதான நபர்கள் யார்

விஜய்க்கு பல எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் அவர்களின் பலம் மேலோங்கிவிட்டது. விஜய்யையும் அவரின் படங்களையும் அவர்கள் பயங்கரமாக ட்ரெண்ட் செய்கிறார்கள்.

இதனாலே விஜய் ட்விட்டரில் 2018 ல் அதிகம் தேடப்பட்ட பிரபலமாகியுள்ளார். சர்கார் பட சர்ச்சையை தொடர்ந்து தற்போது புது சர்ச்சை எழுந்துள்ளது. ரசிகர்கள் பெயரில் அந்த கொடுமை நடந்துள்ளது.

சர்கார் பட பிரச்சனையின் போது உங்கள் உசுரெல்லாம் தளபதி கையில் கத்தியுடன் மிரட்டி வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் 2 பேர் கைது தற்போதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அந்த நபர்கள் சஞ்சய், லிங்கதுரை, அனிசேக் என்பதும் தெரியவந்துள்ளது. மூவரையும் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.