Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் அடுத்து படம் இருக்கிறதா இல்லையா? ஏ.ஆர்.முருகதாஸ் என்ன இப்படி கூறிவிட்டார்

விஜய் வைத்து சர்கார் படத்தை இயக்கி முடித்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினியுடன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி சமீபகாலமாகவே பரவி வருகிறது.

ஆனால் இதுபற்றிய எந்த வார்த்தையையும் இதுவரை ரஜினி கூறவில்லை. இந்நிலையில், தன் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற தகவலை முருகதாஸே தற்போது வெளியிட்டுள்ளார்.

ஏனெனில் அடுத்த வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிர அரசியலில் இறங்க ரஜினி முடிவெடுத்துள்ளாராம். இதன் வேலைகள் முடிந்த பின்பே தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்குவாராம்.

அதனால் ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பாதிக்கு மேல் துவங்க தான் அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இடைக்காலத்தில் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கும் திட்டத்திலும் உள்ளாராம்.