Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பருத்தி வீரன் நடிகருக்கு பன்றி காய்ச்சலா? அவரது பதில் என்ன தெரியுமா

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமான பருத்தி வீரனில் கார்த்தியுடன் நடித்திருந்தவர் சரவணன். வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு பருத்தி வீரன் முக்கிய படமாக அமைந்தது.

இதனால் தொடர்ந்து இவருக்கு குணச்சித்ர வேடங்களாக வந்து குவிந்தன. இந்நிலையில் இவர் பன்றி காய்ச்சலில் அவதிப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் சில வாரங்களுக்கு முன்னர் பரவியது.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அது சாதாரண காய்ச்சல் தான். சேலத்தில் இருந்தபோது காய்ச்சல் இருந்தது. பிறகு சென்னை வந்தபோதும் காய்ச்சல் தொடர்ந்தது. இதை தான் சிலர் பன்றி காய்ச்சல் என பரப்பிவிட்டனர் என சரவணன் தற்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.