Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி அந்த ரசிகையை தளபதி குணப்படுத்திவிடுவார், நெகிழ்ச்சி சம்பவம்

தளபதி விஜய் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வரும் படங்களை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க விஜய்க்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர், அதில் ஓசூரை சார்ந்த ரசிகை ஒருவரின் மருத்துவ செலவை விஜய் பார்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

என்ன இது ஒன்றும் புரியவில்லையே, என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது, வேறு ஒன்றுமில்லை, விஜய்யின் ரசிகை ஒருவருக்கு எழும்பு அடிக்கடி உடைவது போல் ஒரு நோய் உள்ளதாம்.

கஷ்டத்தில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு மருத்துவ செலவை ஏற்க கூட யாருமில்லையாம், அந்த மாணவிக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

இதனால் ரசிகர்கள் பலரும் அந்த பெண்ணில் நிலையை விஜய்யிடம் கொண்டு சென்றுள்ளனர், கண்டிப்பாக அந்த மாணவியின் உடல்நல சிகிச்சை செலவை விஜய் ஏற்பார் என தெரிகின்றது.