Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்டிப்பா லவ் மேரேஜ் தான்... காதலை வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஷால்

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலின்போதே தான் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தான் திருமணம் என அறிவித்தவர். கட்டிட பணிகள் தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் இந்த வாரம் இயக்குனர் சமுத்திரக்கனி வந்துள்ளார். அவருடன் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் விஷால் நிவாரண பொருட்களை ஏற்றி அனுப்பியுள்ளார்.

மேலும் தன் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் "நிச்சயமா லவ் மேரேஜ் தான்" என அறிவித்துள்ளார். நீண்டகாலமாக விஷால் மற்றும் வரலக்ஷ்மி காதலித்து வருவதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.