Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லேட்டஸ்ட் மெகாஹிட் பட இயக்குனருடன் இணைந்த விக்ரம்! அப்போ மாஸா தான் இருக்கும்

நடிகர் கமலின் தயாரிப்பில் கடாரம் கொண்டேன் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.

இந்நிலையில் விக்ரமின் அடுத்த படத்திற்கான தகவல்கள் வந்துள்ளன. விக்ரமின் அடுத்த படத்தை நயன்தாரா, அதர்வா ஆகியோரை வைத்து இமைக்கா நொடிகள் என்ற ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து தான் இயக்க உள்ளாராம்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை மிகப்பெரிய நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து DeMonte Colony என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.