Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடிச்சி தூக்கு பாடலுக்கு கிடைத்த வரவேற்பிற்கு அஜித்திடம் இருந்து வந்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா!

அஜித்தின் விஸ்வாசம் படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக்காக அடிச்சி தூக்கு பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானதால் தற்போது வரை பல சாதனைகளை செய்து வருகிறது.

மேலும் இப்பாடலை புகழ்ந்து தள்ளி பல சினிமா பிரபலங்களும் தங்களது ட்விட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பாடலுக்கு வரிகளை எழுதிய விவேகா சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அதில், இப்பாடல் நிமிஷத்துக்கு நிமிஷம் ரெக்கார்ட்டை கிரியேட் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் இருந்த எல்லா சாதனைகளையும் இப்பாடல் முறியடித்துள்ளது என்பதை கேட்க்கும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சிவா சார் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார், நேற்று இரவு கூட போன் செய்து அஜித் சாருக்கு பாடல் ரொம்ப பிடித்துவிட்டது. திரும்புகின்ற பக்கமெல்லாம் டானே டர்ராவான் தௌலத்து கிர்ராவான் என அடிச்சி தள்ளிட்டு இருப்பதால் அஜித் சார் very much happy என சிவா சார் சொன்னார் என கூறினார்.