Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-வினோத் இணையும் புதிய படத்தில் பிரபல முன்னணி இந்தி நடிகர்! மாஸான தகவல்

அஜித்-சிவா கூட்டணி விஸ்வாசம் படத்துடன் முடிவதாக தெரிகிறது. அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு வைரல் தகவல், இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படம் குறித்து நிறைய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படம் ஹிந்தியில் வெளியான Pink படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தில் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்பே உண்மை தெரியவரும்.