Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி மட்டும் இல்லை, அஜித்தும் தான் எனது வளர்ச்சிக்கு காரணம்! ராகவா லாரன்ஸ், அப்போ விஜய்

ரஜினியின் தீவிர ரசிகனாக தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தி கொண்டவர் ராகவா லாரன்ஸ். பிறகு தனது நடனத்திறமையால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

தற்சமயம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவரும் அவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியாவது, ரஜினி சார் என்னை பார்த்து, டேய்.. நல்லா டான்ஸ் ஆடுறடானு லெட்டர் கொடுக்கவில்லை என்றால் நான் எப்படி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும்.

அதேபோல் அமர்களம் படத்தில் என்னை இயக்குனர் சரண் டான்ஸ் ஆட சொல்லும்போது, அஜித் சார் என்னை ஆட வேண்டாம் என சொல்லியிருந்தாலோ, அல்லது திருமலை படத்தில் விஜய் சார் எனக்கு ஓபனிங் சாங்கில் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தாலோ என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியுமா என தனது ஸ்டைலில் கூறினார்.