Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகன் முன்னணி ஹீரோ, ஆனால் அப்பா இன்னமும் பஸ் டிரைவர்

பெரும்பாலும் சினிமா துறையில் முன்னணிக்கு வந்துவிட்டால் சொகுசு வாழ்க்கையுடன் குடும்பமே செட்டில் ஆகிவிடும் என்று தான் நாம் அனைவரும் நினைத்திருப்போம்.

ஆனால் கன்னட நடிகர் யாஷ் தற்போது சினிமா துறையில் பெரிய ஸ்டாராக இருந்தாலும், தன் அப்பா இப்போதும் பஸ் டிரைவராக தான் இருப்பதாக கூறியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் அவர் நடித்துள்ள கேஜிஎப் படத்தின் பிரெஸ் மீட்டில் தான் இது தெரியவந்துள்ளது. பலகோடி சம்பளம் வாங்கினாலும் அவரது அப்பா இன்னமும் தன் பணியை செய்துகொண்டிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக விஷால் தெரிவித்தார்.

அந்த படத்தினை நடிகர் விஷால் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.