Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா?

ஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் நடித்த க்ரிஷ் சீரியஸுகளுக்கு தமிழகத்திலேயே மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹிரித்திக் ரோஷன் தமிழ் படங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் ‘சமீபத்தில் தமிழில் எனக்கு பிடித்த திரைப்படம் விக்ரம் வேதா, எப்போதுமே எனக்கு பிடித்த நடிகர் ரஜினி தான்’ என்று ஹிரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகின்றது, ஆனால், நான் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, எதிர்காலத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.