Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை பற்றி இனி நியூஸ் வந்தாலே அது வதந்தி தான்! வெளியான பரபரப்பு தகவல்

அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அடுத்ததாக தீரன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இதன் பூஜை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதனை யுவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பதற்கு முன் படத்தின் இசை ஏ.ஆர்.ரகுமான் என்ற வதந்தி வேகமாக பரவி வந்தது.

படத்திற்கு இசை யுவன் தான் என அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவே சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. இதனால் இதுபோன்ற வதந்திகளை இனிமேலும் பரப்பாமல் இருக்க அஜித் படங்களின் அப்டேட்கள் இனி பத்திரிக்கைகளில் மட்டும் தான் வரும் என்று அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சமூக வலைத்தளங்களையும் யாரும் இனி நம்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.