Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் இந்த படத்தில் ரோப், டூப் என எதுவுமே இல்லாமல் நடித்தார்! தளபதியை பார்த்து மிரண்ட ஸ்டண்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் தனது உழைப்பை முழுவதுமாக கொடுக்கக்கூடிய நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். அவரது சமீபத்திய படங்களில் அதை தெளிவாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் இதுபோன்ற அசாதாரணமான காட்சிகளை விஜய் ஆரம்பகால கட்டத்தில் இருந்தே செய்து வந்துள்ளது பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவின் சமீபத்திய பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

அப்பேட்டியில் அவர் பேசியதாவது, விஜய்யுடனான படங்களில் மறக்க முடியாதது, காதலுக்கு மரியாதை. இரவு நேரத்தில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருப்போம். ஒரு முக்கியமான காட்சி, ஒரு ஃபைட்டர் கீழே குதிப்பார், அவருடனே விஜய்யும் குதிக்க வேண்டும்.

அப்போ இப்போது உள்ளது போல CG இல்லாததால் ரோப் யூஸ் பன்ன முடியாது, விஜய் மெத்தை, டூப் என எதையும் யூஸ் பண்ணமால் முன்பக்கமாக சுழன்று அந்த ஃபைட்டர் மீது விழுவார் என பிரம்மிப்பாக கூறினார்.