Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒன்ஸ் மோர் கேட்ட ரோபோ ஷங்கர்! பிரபல தியேட்டரில் நடந்த சம்பவம் - வீடியோ

நடிகர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிங்களில் ஒருவர். அவர் சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார்.

நேற்று வெளியான பல படங்களை விட மாரி 2 அதிக வசூல் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் நெல்லை ராம் சினிமாஸ் சென்று மாரி 2 படத்தை பார்த்துள்ளார். அப்போது படத்தில் வரும் ரவுடி பேபி பாடலை ஒன்ஸ் மோர் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

அதை ஏற்றுக்கொண்டு தியேட்டர் நிர்வாகமும் இரண்டாவது முறை ரௌடி பேபி பாடலை போட்டுள்ளனர்.