Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டவர்கள் மீது விஷால் அதிரடி நடவடிக்கை

சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் அவசர செயற்குழுகூட்டம் இன்று நடந்தது.

அதில் சங்க அலுவலகத்திற்கு பூட்டுப்போட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது பற்றிஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. டி.சிவா, ஏ.எல்.அழகப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுள்ளார்.