Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி63 படத்தை பற்றி விஜய்யே கூறிய தகவல்! எந்த மாதிரியான கதை என்று பாருங்கள்

சர்கார் படத்திற்கு அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

தற்போதைக்கு தளபதி-63 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்நிலையில் விஜய்யை சமீபத்தில் சந்தித்த பிரபல ராம் முத்துராம் சினிமாஸின் உரிமையாளர், அங்கு விஜய்யுடன் நடந்த உரையாடலை பற்றி கூறியுள்ளார்.

அதில், தளபதி-63 படம் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என விஜய்யே கூறினார். பொதுவாக தனது அடுத்த படத்தை பற்றி விஜய் எந்தவொரு தகவலையும் வெளியிடமாட்டார். ஆனால் அட்லீயின் மேல் உள்ள அதீத நம்பிக்கையினால் கூறியுள்ளார்.

மேலும் திருநெல்வேலிக்கு வந்தால் கண்டிப்பாக என்னுடைய படத்தை என் ரசிகர்களுடன் பார்ப்பேன் என்றும் கூறியதாக கூறியுள்ளார்.