Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலில் நீக்கப்பட்ட எனது வசனத்தை சர்காரில் தளபதியே பேசி அசத்திவிட்டார்! நெகிழ்ந்த பிரபலம்

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் விஜய், யாருய்யா அவரு, எனக்கே அவர பாக்கனும் போல இருக்கே என்ற வசனத்தை கூறியிருப்பார்.

இந்த வசனத்திற்கு பிரபலமானவர், அப்துல் என்ற காமெடி நடிகர் தான். அவர் மெர்சலில் விஜய்யுடன் நடித்தது மட்டுமில்லாமல் அந்த வசனத்தையும் பேசினாராம்.

நித்யாமேனனிடம், விஜய் சொல்லும் 18 குழந்தைகளா என்ற வசனம் வரும் இடத்தில் தான் இந்த வசனத்தை அப்துல் பேசினாராம். ஆனால் எடிட்டிங்கில் அந்த வசனத்தை நீக்கியுள்ளனர்.

ஆனால் அதை சர்காரில் தளபதியே பேசியிருப்பதை பார்த்து பயங்கர ஷாக்கானதாக அப்துல் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.