Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் முதன்முதலாக சிம்பு ஏற்க இருக்கும் வேடம்! இயக்குனர் யார் என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீர்கள்

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார், சிம்பு. பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசத்துடன் ரிலீஸ் என சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளிப்போனது.

இந்த படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்ற முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான கதையில் நடிக்க இருக்கிறார். மேலும் பெரியார் குத்து என்ற ஆல்பம் பாடலும் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் மேற்கூறிய படங்களை எல்லாம் முடித்த பிறகு பிரபல அரசியல்வாதியும் இயக்குனருமான சீமானின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படமும் அரசியல் சம்பந்தமான படம் என்று தான் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிம்புவிற்கு மருத்துவர் வேடமாம். இதுவரை சிம்பு இந்த கதாபாத்திரத்தை ஏற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.