Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதற்கு தான் நான் இந்த நிகழ்ச்சியை செய்யமாட்டேன் என்றேன், கதறி அழுத விஷால்

விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர்.

இவர் சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் கலந்துக்கொள்வார்கள், மேலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விவாதம் நடத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் குஷ்பு கலந்துக்கொள்ள, கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இதில் கலந்துக்கொண்டார்.

இதன் ப்ரோமோவில் ஒரு கட்டத்தில் விஷால் ‘இதற்கு தான் நான் இந்த நிகழ்ச்சியை செய்ய மாட்டேன் என்றேன், எனக்கு இந்த வலி தெரியும்’ என்று சொல்லி அழுதுக்கொண்டே நிகழ்ச்சியை விட்டு வெளியேற குஷ்பு அவரை சமாதானப்படுத்தினார்.