சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர், அப்படியிருக்க விஜய்யை வைத்து புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வக்குமார் ஒரு அதிர்ச்சி பேட்டியை கொடுத்துள்ளார்.
அதில் இவர் ‘சர்கார் வசூலை 2.0 தொடவே இல்லைங்க, ரஜினியை தாண்டி விஜய் சென்றுவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தையும் கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர். ஏனெனில் 2.0 தான் எங்கள் திரையரங்கில் அதிக வசூல் என தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.