தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு வரும் கூட்டம் என்பது நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் விமர்சகர் ரவீந்திரன் துரை சாமி என்பவர் ‘விஜய் அஜித் படங்களுக்கு நல்ல கூட்டம் வருவது உண்மை தான்.
ஆனால், அவர்களுக்கு படுதோல்வியடைந்த படங்கள் சமீபத்திலேயே உள்ளது, அந்த வகையில் இவர்களை காட்டிலும் அதிக லாபம் தரும் படங்களோ, பெரும் தோல்வியோ கொடுக்காத படமோ இருப்பது சிவகார்த்திகேயனுக்கு தான்.
இதை சிவகார்த்திகேயன் எங்கேயும் வெளியில் காட்டிக்கொள்வது இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.