Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி கண்டிப்பாக முதல்வராவார்! பிரபலத்தின் பேட்டிக்கு விஜய் தரப்பிலிருந்து வந்த அதிரடியான பதில்

நடிகர் விஜய்யின் முன்னாள் PROவும் தயாரிப்பாளருமான P.T.செல்வகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், 2.0 படத்தின் தமிழ்நாட்டு வசூலை விஜய்யின் சர்கார் படம் முறியடித்துவிட்டது.

என் கணிப்புப்படி விஜய் அரசியலுக்கு வருவார். முதல்வராகும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது. ஆனால் நான் இதை அவரிடம் கூறியது கிடையாது. அஜித்தையும் காலம் அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் என பல சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்தார். இவற்றையெல்லாம் நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து தற்போது இதற்கு பிரதான விஜய் ரசிகர் மன்றத்தினரிடம் இருந்து மறுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது.