Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் ஆசை இயக்குனர் சிவா, விஜய் குறித்தும் அவருடன் படம் பற்றியும் கூறியுள்ள சுவாரஸ்ய விஷயம்

அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக நாளை வெளியாக போகும் படம் விஸ்வாசம். படம் தீபாவளிக்கு வர வேண்டியது ஆனால் சில காரணங்களால் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த படத்தை தல ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்கிறார்கள். வருடம் கடந்து அஜித்தை திரையில் பார்க்க இருப்பதால் அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது. ரசிகர்களும் ஒருபக்கம் புரொமோஷன் வேலைகளை மாஸாக செய்து வருகின்றனர்.

படம் குறித்தும் இயக்குனர் சிவா பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசும்போது, எனக்கு விஜய் அவர்களுடன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அவருக்காக ஒரு கதை ரெடி தயார் செய்து வைத்துள்ளேன், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

விஜய் சார் எப்போதும் என்னிடம் அன்பாக பேசக் கூடியவர், கண்டிப்பாக அவருடன் ஒரு படம் பண்ணுவேன் என்றார்.