Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றி படத்தை கொடுத்தும் மிகுந்த மன வருத்ததிற்கு ஆளான இளம் நடிகர்! இப்படி ஒரு சோதனையா

அண்மையில் வந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பரியேறும் பெருமாள். மக்களை ஈர்த்த இந்த படம் 2018 ன் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்று சொல்லலாம். கபாலி, காலா பட இயக்குனர் ரஞ்சித் இப்படத்தை தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் கதிர்.

அவர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சிகை. பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் சமூகத்தில் எப்படியான பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. சஸ்பென்ஸ் கிரைம் படமான இப்படத்தை யாரும் வாங்க முன் வரவில்லையாம். இதனால் தயாரிப்பாளர் ஜி 5 ஆப்பிற்கு விற்றுவிட்டாராம்.

இதனால் படம் தியேட்டரில் வராமல் நேரடியாக அந்த செயலியில் வந்துவிட்டது. இப்படத்தை கதிர் தன் சினிமா நண்பர்களுக்கு போட்டு காட்ட அவர்கள் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுருந்தால் ராட்சஸன் படம் போல ஹிட்டாகியிருக்கும் என கூறியுள்ளார்கள்.

தான் மிகவும் எதிர்பார்த்த இப்படம் இப்படி ஆகிவிட்டதே என அதிக மன கவலையில் இருக்கின்றாராம் நடிகர் கதிர்.