Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் ரிலீஸில் கத்திக்குத்து, கட்அவுட் சரிவு- பேட்ட ரிலீஸின்போது என்ன நடந்துள்ளது தெரியுமா

அஜித்தின் விஸ்வாசத்துடன் ரஜினியின் பேட்டயும் இன்று வெளியாகியுள்ளது. இதனால் இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மோதலை பட ரிலீஸ் தேதியான இன்றும் காண முடிந்தது.

மேலும் ரஜினி பேனரை கிழித்தது, டிக்கெட்க்கு பணம் தராததால் தந்தையின் முகத்தை கொளுத்தியது, மிகப்பெரிய கட்அவுட் சரிந்து விழுந்தது என அஜித் ரசிகர்களின் இந்த கொண்டாட்டத்தில் பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.

ஆனால் இந்த பக்கம் பேட்ட கொண்டாட்டத்தில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று, சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டர் வளாகத்தில் அன்பரசு என்ற ரசிகருக்கும் அவரது காதலிக்கும் திருமணம் நடந்துள்ளது. மேலும் தஞ்சையிலும் இதுபோல் ஒரு திருமணம் நடந்துள்ளதாம்.