Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல ரவுண்ட் கட்டி அடிச்சிருக்காரு...! முன்னணி நடிகரின் மாஸான ட்விட்

தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகள் யாவும் தல ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை விஸ்வாசம் படத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

முன்னர் ரஜினியின் பேட்ட படத்தை பார்த்துவிட்டு கருத்து சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விஸ்வாசத்தை பார்த்து தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.