Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு வார்த்தைதான்.. பேட்ட படத்தை விமர்சித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார்

முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபலங்கள் பலரும் படம் பற்றி புகழ்ந்து பேசி வரும் நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பேட்ட படம் பற்றி பேசியுள்ளார்.

"பேட்ட ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம்.. ஒரே வார்த்தைதான்.. தலைவா 🙏 கார்த்திக் சுப்புராஜ் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம்போல சிறப்பாக பணியாற்றியுள்ளார். மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்" என மகேஷ் பாபு கூறியுள்ளார்.