Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் அஜித்! பல வருடங்களாக வெளியே தெரியாத விஷயம் - களத்தில் இறங்கி உண்மையை வெளியிட்ட தீவிர ரசிகைகள்

அஜித் என்றால் சினிமாவில் ஒரு ஸ்பெஷல் பெர்சன் என்றே சொல்லலாம். அவரின் லைஃப் ஸ்டைலே தனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பலருக்கும் அவர் செய்த உதவிகள் வெளியே தெரிவதில்லை. விளம்பரத்திற்காக செய்வதை அவரும் விரும்பவில்லை. அதனால் பயன்பட்டவர்கள் வெளியே சொன்னால் தான் தெரியும்.

விஸ்வாசம் படம் கடந்த வியாழன் அன்று பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சிவா அஜித்தை வைத்து எடுத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்பது பொதுவான கருத்து.

இந்நிலையில் படத்தில் முதல் நாள் அன்றே இரண்டாம் காட்சி பார்க்க திருநங்கைகளும் வந்துள்ளார்கள். அவர்கள் அளித்துள்ள பேட்டியில் விஸ்வாசம் படத்திற்கு வாழ்த்துக்கள்.

ஆரம்பம் படம் ஷூட்டிங்கின் போது எங்களுக்கு மும்பையில் ரூ 25 ஆயிரம் கொடுத்து உதவி செய்தார் என அவர்கள் கூறியுள்ளனர்.