Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை முதன்முதலில் இந்த மாதிரியான இடத்தில் தான் பார்த்தேன்! ரோபோ ஷங்கர் ஓபன்டாக்

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருடன் காமெடியன் ரோபோ ஷங்கரும் நடித்திருந்தார். அவரது காமெடிகள் அனைத்து நன்றாக அமைந்திருந்ததாக படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இவர் அஜித்தை முதன் முதலில் விஸ்வாசத்தின் வேட்டிக்கட்டு பாடலின் படப்பிடிப்பில் தான் பார்த்தாராம். அதுவரை அஜித்தை பார்த்தே இல்லை என்கிறார்.

அஜித்தின் கேரவனுக்கு சென்றதும் என்ன பேசுவது, கை கொடுப்பதா வேண்டாமா என ஒரே பதட்டமாக இருந்தது. ஆனால் அந்த பதட்டத்தை எல்லாம் ஒரு நொடியில் அஜித் உடைத்து விட்டார்.

என்னை பார்த்ததும் ரோபோ ஷங்கர் எப்படி இருக்கீங்க, குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்காங்க என கேட்டுவிட்டு, வாங்க போகலாம் சாங் ஷூட்டிங்கிற்கு என என்னையும் அழைத்து சென்றார் எனவும் ரோபோ ஷங்கர் கூறினார்.