Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசைக்கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி - எத்தனை வருட பழமையான கட்டிடத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலவிதமான கெட்டப்களில் படம் நடித்துவருபவர் விஜய் சேதுபதி.

இவர் அடுத்ததாக பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.

"மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.