Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட 100 கோடி, விஸ்வாசம் 125 கோடி இந்த வசூல் எல்லாம் உண்மையில்லை! உளறி கொட்டிய பிரபலம்

ரஜினியின் பேட்ட படம் 100 கோடி வசூலித்ததாக நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இதற்கு சூட்டோடு சூடாக நேற்றிரவே விஸ்வாசத்தின் KJR ஸ்டியோஸ் பதிலடியாக, விஸ்வாசம் படம் 125 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறினர். இந்த வசூல் மோதல் கோலிவுட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.