Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி- ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம் இதுதானா?

சர்கார் படத்தில் விஜய்யை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் தலைப்பு நாற்காலி எனவும் இதில் ரஜினி முதல்வராக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், படத்தில் ரஜினி மூன்று முகம், அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களை போல போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

ஆனால் இளமையான தோற்றமா அல்லது தற்போதைய தோற்றமா என தெரியவில்லை.