Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 பட பூஜையிலும் மாஸ் காட்டிய விஜய்! என்ன செய்துள்ளார் பாருங்க

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி-63 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. முதல் காட்சியாகவே சண்டைக்காட்சி தான் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சில காரணங்களால் படத்தின் கதாநாயகி நயன்தாரா கலந்துகொள்ளாத இந்த பூஜையில் முதலில் விஜய் முன்வரிசையில் தான் நின்றாராம்.

பிறகு திரும்பி பார்த்த அவர் முக்கியமான உதவி இயக்குனர்கள் அனைவரும் கடைசி வரிசையில் நின்றுள்ளனர். இதனால் மனம் தாங்காத விஜய் அவர்களுடன் கடைசி வரிசையில் நின்றுள்ளார்.

அங்கிருந்த மற்ற டெக்னீஷியன்ஸ் விஜய்யின் செயலை கண்டு புல்லரித்து போய் உள்ளனர்.