Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தவிப்பது வெளிப்படையாக தெரிகிறது! முக்கிய பிரமுகர் கூறிய உண்மை பின்னணி

விஜய் மீதான விமர்சனங்கள் அண்மைகாலமாக அதிகமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் அவரின் படங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் காட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அவரின் பல படங்கள் இது போல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அண்மையில் வந்த சர்கார் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்பு வந்த மெர்சல் படத்திற்கும் சோதனை தான்.

அதே வேளையில் விஜய்யின் அரசியல் வருகை பற்றி அடிக்கடி பேச்சு அமைவதும் எதிர்பார்ப்பு தான். இந்நிலையில் டிவியில் செய்தி சானலில் விவாதம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் எஸ்.பி.லெக்‌ஷமன் விஜய் முன்பு முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார். அதே போல மோடி தமிழகம் வந்த போது அவரையும் சந்தித்து பேசினார்.

இது அவருக்கு அரசியல் ஆசை இருப்பதை காட்டுகிறது. அதே வேளையில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதும் வெளிப்படையாக தெரிகிறது என கூறியுள்ளார்.