நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் தான் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் அரசியலில் ஓட்டளிக்கும் அளவுக்கு மட்டுமே ஆர்வம் என்று கூறியிருந்தார்.
இதைப்பற்றிய பேச்சு எழுந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியனும் வரவேற்றுள்ளார்.
அவர் கூறுகையில், அவரின் அறிக்கையை வரவேற்கிறேன். அஜித் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மகன் போல இருந்தார்.
அவர் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார். அவர் மீது அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகன் மாதிரி அஜித் இருந்தார் - Tamil Nadu Minister Mr. K. Pandiarajan#AjithKumar #Viswasam pic.twitter.com/SJ4Lf7qUgw
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) January 23, 2019