Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னுடைய ரசிகர்கள் என்று விஜய் சொல்லி பெருமைப்படும் அளவிற்கு முக்கிய விஷயத்தை செய்த இளைஞர்கள்

தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் சில விஷயத்துக்காக போராட்டத்தில் உள்ளனர். கடந்த 2 நாட்களாக எந்த ஒரு அரசு பள்ளியிலும் பாடம் எதுவும் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் 94 மாணவ மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் பாடம் நடத்திவரும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரசிகர்கள் இணைந்து பணம் சேர்த்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த நல்ல செயலை கண்டு விஜய் பெருமைப்படுவார் என பலர் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.