Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பால் திருட்டு, சிம்பு பேச்சு பற்றி போலீசில் புகார்

சிம்பு நேற்று வெளியிட்ட வீடியோவில் தன் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யவேண்டும் என கூறியிருந்தார். அது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளது.

இப்படி கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதால் குழந்தைகள் பால் இல்லாமல் இருக்க நேரிடும். ஏற்கனவே பால் திருடும் சம்பவங்களும் நடக்கிறது. சிம்பு சொல்வது போல ரசிகர்கள் நடந்தால் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் சிம்பு பட ரீலீஸ் அன்று பால் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் மற்றும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சங்கம் சார்பில் சென்னை போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.