Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்? உண்மை என்ன

விஜய் நடித்த பைரவா படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்தவர் டேனியல் பாலாஜி. அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்த இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

தமிழ், கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வந்த வடசென்னை, விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் அவர் விஜய் 63 படத்திலும் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது புதிதாக டிவிட்டரில் @danielbalajiof1 என புதியதாக பக்கத்தை தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் சுற்றி வருகிறது. அதிகாரபூர்வ கணக்கு எனவும் இதில் கூறியுள்ளார்கள். இதனை சில விஜய் ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே அவர் @DanielBalaje என்ற ஐடியில் கணக்கு வைத்துள்ளார். இதனால் மற்ற ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மை என்ன நடிகர் தான் கூற வேண்டும்.