Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் கொண்டாட்டத்தை தாண்டி ரசிகர்களை பெருமைப்பட வைத்த அஜித்

அஜித் சினிமாவை தாண்டி தொழில்நுட்ப விஷயங்களில் அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு ஏற்றார் போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாக நியமித்தனர். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்‌ஷா குழு வடிவமைத்த பெரிய வடிவிலான ட்ரோன் டாக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

70 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன் டாக்ஸி 2 பேரை தூக்கிச் செல்லும் திறன் வாய்ந்தது. அவசர காலத்தில், இந்த ட்ரோனை பயன்படுத்தி, பொதுமக்களை காப்பாற்ற முடியும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அஜித் ரசிகர்களுக்கு பெருமைப்படும் விஷயமாக அமைந்துள்ளது.