Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல மாதங்கள் கழித்து வெளிவந்த சூர்யாவின் NGK பட அப்டேட்! டீசர் தேதி வெளிவந்தது

சூர்யாவின் நடிப்பில் NGK படம் பல மாதங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

முன்பு தீபாவளிக்கு ரிலீஸ் என சொல்லப்பட்ட இப்படம் பொங்கல் கூட வெளியாகவில்லை. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இரண்டாவது முறையாக பாடல்களை கம்போஸ் செய்யும் வேலையில் இறங்கினார். இதனால் தான் பட ரிலீஸுக்கு தாமதமானது என்றும் கூறப்பட்டது.

கடைசியாக செகண்ட் லுக் வெளிவந்தே 3 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் வருத்தத்தில் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தற்போது டீசர் வரும் பிப்பரவி 14 காதலர் தினத்திற்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.