Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி63 படப்பிடிப்பு நிறுத்தமா? விஜய் தரப்பிடம் இருந்து வந்த அதிரடி விளக்கம்

சர்கார் படத்திற்கு அடுத்ததாக அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்யுடன் கதிர், விவேக், யோகிபாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி போன்றோர் நடிக்கின்றனர். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் வேகமாக நடந்து வருகிறது. விஜய் படப்பிடிப்புக்கு வரும் நேரத்தை ரசிகர்கள் தெரிந்து வைத்துள்ளதால் சரியாக அந்த நேரத்தில் மிகப்பெரிய கூட்டமே கூடிவிடுகிறது.

இதனால் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறுத்திவிட்டதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, விஜய்க்கு கொடுத்த கால்ஷீட்படி தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது என விஜய்யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.