Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சீரியல் நடிகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை! பெண் காரணமா, தந்தை பகிரங்க குற்றச்சாட்டு

இந்தி டிவி சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ராகுல் தீக்சித்(28). ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து மும்பை வந்து வீடு எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் தீக்சித் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுல் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் கடிதம் எதுவும் எழுதி வைக்காத நிலையில், இது தற்கொலை அல்ல கொலை, ரூபாலி கஷ்யப் என்ற பெண் தான் என் மகனை கொலை செய்துள்ளார், ராகுலின் உடலில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன என்று அவரது தந்தை பேஸ்புக்கில் பகிரங்கமாக கூறியுள்ளார்.