Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கா ரெட் கார்டு.. பிறந்தநாள் பார்ட்டியில் பதிலடி கொடுத்த சிம்பு!

AAA படம் படுதோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் என கூறி தயாரிப்பாளர் நஷ்டஈடு கேட்டதற்கு சிம்பு தர மறுத்ததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது. அதற்காக நடிகர் விஷாலை சிம்பு ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

இருப்பினும் அவர் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. அதில் "எனக்கா ரெட் கார்டு எடுத்து பார் என் ரெகார்ட் " என ஒரு பாடல் வரிகளும் இருந்தது.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு தன் நெருங்கிய நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் தனுஷ், யுவன், மேகா ஆகாஷ் என பலரும் கலந்துகொண்டனர்.

சிம்பு உட்பட பார்ட்டிக்கு வந்த பலரும் ரெட் உடையில் தான் வந்திருந்தனர். கேக்கும் ரெட் கலரில் தான் இருந்தது. ஏன் என விசாரித்தால் சிம்பு கொடுத்த அழைப்பிதழில் டிரஸ்கோடு சிவப்பு நிறம் என போடப்பட்டிருந்ததாம். மேலும் அழைப்பிதழே சிவப்பு நிறத்தில் தான் அச்சிடப்பட்டிருந்ததாம்.

"Red card for me? Now I will give red card for all of you." என அதில் போட்டுள்ளார் சிம்பு. தனக்கு போடப்பட்ட ரெட் கார்டை விமர்சிக்க தான் சிம்பு இப்படி செய்துள்ளார்.