Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய், ரஜினி ஜாதி என்னனு கேட்டார்களா? - பிரபல நடிகர் அதிரடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் நடிகராக கலக்கியவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவர் தற்போது அரசியலில் குதித்துள்ளார். விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் மோடி பற்றி தாக்கி பேசியுள்ளார். ஜாதி, மதம் என பிரிவினையை தூண்டுவதாக மோடி மீது குற்றச்சாட்டு வைத்துள்ள அவரிடம்

'நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் தான் ஹிந்து கட்சியை எதிர்க்கிறீர்கள்?" என பாஜாக கூறுவது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "தளபதி விஜய் கிறிஸ்டியன் என தமிழ்நாட்டு மக்கள் யோசித்தார்களா? ரஜினி என்ன ஜாதி என கேட்டார்களா? கமல் என்ன ஜாதி கேட்டார்களா?. கலைஞர் பற்றி கேட்டார்களா? இப்படி ஒரு சிந்தனையை ஏன் கொண்டுவருகிறீர்கள்?"

"எலெக்ட்ரிசிட்டியை ஹிந்துவா கண்டுபிடிச்சான், பெட்ரோல் எங்க இருந்து வருது. அப்துல் கலாம் முஸ்லீம்னு சொல்லிடலாமா" என பிரகாஷ் ராஜ் கோபமாக பேசியுள்ளார்.