Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் தளபதி63ல் நான் நடிக்கவில்லை! வதந்திகளை மறுத்த நடிகர்

அட்லீயின் இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி-63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகிபாபு, விவேக் போன்றோரும் படத்தில் நடிக்கின்றனர்.

ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படமாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்த ராஜ்குமாரும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி சில தினங்களாக இணையத்தில் பரவியது.

இந்த வதந்திக்கு ஆதாரமாக யோகிபாபுவுடன் ராஜ்குமார் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படம் எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் நான் தளபதி-63 படத்தில் நடிக்கவில்லை என தற்போது ராஜ்குமார் விளக்கமளித்துள்ளார்.

மேலும், அந்த போட்டோ கதிருடன் நான் நடிக்கும் ஜாடா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.