Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிரடியாக வெளிவந்த சூர்யாவின் அடுத்த பட தயாரிப்பு! அதுவும் இந்த நடிகையுடனா

செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் 2D Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் சில படங்களை சூர்யா தயாரிக்கவும் செய்கிறார்.

அவரது தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நல்ல வசூலை பார்த்தன. தற்போது இவரது தயாரிப்பில் மற்றொரு படம் தயாராக இருக்கிறது.

36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகையும் அவரது மனைவியுமான ஜோதிகா தான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரேவதி, யோகிபாபு போன்றோரும் நடிக்கின்றனர். குலேபகாவலி பட இயக்குனர் கல்யான் இப்படத்தை இயக்குகிறார்.