Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் அப்படி வளரவில்லை.. கொலை மிரட்டல் குற்றச்சாட்டு பற்றி நடிகர் கருணாகரன் அறிக்கை

சமீபத்தில் வெளிவந்த பொதுநலன் கருதி என்கிற படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர் நடிகர் கருணாகரன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும் அவர் 25 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் போனது பற்றியும் அவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்நிலையில் இது பற்றி கருணாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "அதில் நான் அப்படி வளரவில்லை. கந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உயிரை பணயம் வைத்து பல காட்சிகளில் நடித்தேன். கடைசி நேரத்தில் சொன்னதால் பட விழாவுக்கு வரமுடியவில்லை. எந்த நடிகரும் படம் ஓடக்கூடாது என நினைக்கமாட்டார்கள்" என கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.